அரச சேவையில் உள்வாங்கப்படும் பட்டதாரிகள், மக்களுக்காக செயற்பட வேண்டும் என, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம,பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அரச சேவையில், புதிதாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகள், மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களை செயற்படுத்தும் உத்தியோகத்தர்களாக செயற்பட வேண்டும் என, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம,பிரதீபன் தெரிவித்துள்ளார்.
பட்டதாரி பயிலுநர்களாக, அரச சேவையில் இணைக்கப்பட்டவர்களுக்கான பயிற்சி நேற்று (14) ஆரம்பமான நிலையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
பல எதிர்பார்ப்புக்களோடு, பட்டதாரிகளாகிய நீங்கள், அரச சேவையில் இணைந்திருக்கின்றீர்கள் எனவும், ஆனால் உங்களை விட அதிக எதிர்பார்ப்புக்களுடன், பொது மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும், அவர்களுடைய சேவை, தேவைகளை நிறைவேற்ற காத்திருக்கிறார்கள் எனவும், மேலதிக அரசாங்க அதிபர் ம,பிரதீபன் குறிப்பிட்டுள்ளார்.
பட்டதாரி பயிலுநர்களுகளுக்கான பயிற்சிகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கனபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பிரிகேடியர் ஐனக விஐயசிங்க, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் ஜீவசுதன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பட்டதாரி பயிலுனர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.