பயங்கரவாதிகள் கூட பாராளுமன்ற உறுப்புரிமையை பெறும் நிலை ஏற்படும் என அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் கூட பாராளுமன்ற உறுப்புரிமையை பெறும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின்; பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர் பாராளுமன்ற உறுப்பினராக சட்டப்பூர்வமாக பதவியேற்ற சந்தர்ப்பம் இதற்கு முன்னர் இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இடம்பெற்றதில்லை.
பிரேமலால் ஜயசேகர என்ற குற்றவாளியை பாராளுமன்றத்திற்கு அனுமதிக்க பல தரப்பினர் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.
இந்த நீதிமன்றம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த நியமனத்தின் சட்ட அங்கிகாரம் மற்றும் அங்கிகாரமற்ற தன்மை குறித்தோ அல்லாது அவரது தகுதியற்ற தன்மை குறித்து கேள்விக்கு உட்படுத்தாது என மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாராளுமன்ற அமர்வு மற்றும் வாக்களிப்பு போன்ற விடயதானங்கள் இந்த நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட மாட்டாது என்பதுடன் இந்த நெருக்கடிக்கான தீர்வை சபாநாயகர் அல்லது வேறு நீதிமன்றில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள முடியும் என எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.
இதே தன்மையுடைய சரத் பொன்சேகாவின் வழக்கில், அரசியலமைப்பிற்கு அமைவாக சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்புரிமையை பெற தகுதியற்றவராக சபாநாயகர் வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி தீர்வை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்று செயற்பட்டிருக்கவில்லை. அவ்வாறானதொரு சட்ட தன்மையும் அங்கில்லை.
எனவே பிரேமலால் விடயத்தில் சபாநாயகர் தனது தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும்.
அவ்வாறு அல்லாது பாராளுமன்றத்தின் உயரிய தன்மையை சீரழித்து செயற்படும் நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பயங்கரவாதிகள் கூட பாராளுமன்ற உறுப்புரிமையை பெறும் நிலை ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார