27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 129 பேர் சிறையில்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 129 பேர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இவர்களில் 125 பேர் விளக்கமறியலில் உள்ளதாக தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவிற்கு அமைய இலங்கை பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை வழங்குமாறு, தகவல் அறியும் உரிமையின் கீழ், ஜூலை 2021 இல் செய்யப்பட்ட கோரிக்கை பொலிஸாரால் நிராகரிக்கப்பட்ட பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்ட அம்பிகா சற்குணநாதன் மேன்முறையீடு செய்ததையடுத்து, ஆணைக்குழு உத்தரவிட்டிருந்த நிலையில் தகவல்களை வெளியிட வேண்டிய நிலைமை பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு ஏற்பட்டது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பெரும்பாலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்த எண்ணிக்கை 81 ஆகும். அவர்களில் 42 பேர் உயர்நீதிமன்றத்தினாலும், 39 பேர் நீதவான் நீதிமன்றத்தினாலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 44 பேர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்றி இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும், மற்றையவர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், பொலிஸாரின் புள்ளிவிவரங்களுக்கும் சிறைச்சாலை புள்ளிவிவரங்களுக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ‘2021 ஓகஸ்டில்’ சிறைச்சாலை புள்ளிவிவரத் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைய, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆகும். 85 பேர் விளக்கமறியலில் உள்ளனர். 205 பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 298 ஆகும்’ என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் கையளிப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் இன்று கையளிக்கப்பட்டது.150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்...