24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பரீட்சை வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான வினாக்கள் – விசாரணைகள் ஆரம்பம்!

களுத்துறை சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தில் இரண்டாம் தவணைப் பரீட்சையில் உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரீட்சை வினாத்தாள் தொடர்பில் அமைச்சு மட்டத்தில் துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த வினாத்தாளில் அரசியல் கட்சியொன்று தொடர்பாக ஐந்து வினாக்கள் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அந்த வினாத்தாள் சம்பந்தப்பட்ட பாடசாலை தரப்பினரால் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles