வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்று சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக கொட்டகை அமைத்து சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும் எனவும், அவ்வாறு தீர்க்கப்படாத பட்சத்தில் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றிலிருந்து சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்களும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அவர்கள் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.