நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மூடப்படும் சகல பாடசாலைகளும், எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்குத் தேவையான மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கான சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மீண்டும் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.