கேகாலை, ருவன்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோணகல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று புதன்கிழமை (29) குளவி கொட்டுக்கு இலக்காகி 13 மாணவர்கள் உட்பட 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்காகியவர்கள் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை அதிபர், இரண்டு ஆசிரியர்கள், 13 மாணவர்கள் மற்றும் 03 பெற்றோர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை வளாகத்தில் உள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.