ராஜகிரிய பகுதியில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளான சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட திலும் துசித குமாரா, அண்மையில் இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனை அடுத்து அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டாவத்த அவருக்கு எதிராக பிடியாணை ஒன்றை பிறப்பித்திருந்தார்.
எனினும் இடையீட்டு மனு ஒன்றின் ஊடாக துசித்த குமார நீதிமனறத்தில் சரணடைந்த நிலையில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டது.
இதனை தொடர்ந்தே, அவர் ஒக்டோபர் 5 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் அவர் 4 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்க பிணைக்கு மேலதிகமாக ஆள் பிணைகளின் அடிப்படைடியிலும் விடுதலை செய்யப்ட்டமை குறிப்பிடத்தக்கது.