யாழ்ப்பாணம் – வடமராட்சியில் மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட புனிதநகர் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று கள விஜயம் மேற்கொண்டார்.யாழ்ப்பாணம் – வடமராட்சியில் மழை, வெள்ளம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட புனிதநகர் பகுதிக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்ய கொண்டா நேற்று கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார்.
கடும் மழை, வெள்ளம் காரணமாக, பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனித நகர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் கற்கோவளம் மெதடிஸ்த மிஷன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் நேற்று அங்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெள்ள நிலமை தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடியிருந்தார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்ட அவர், இப்பகுதியில் ஏற்பட்ட இடர்பாடு தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார்.