30 C
Colombo
Monday, August 2, 2021
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாலையடித்தோனா கிராமத்தில் வீடின்றி துன்பப்பட்ட குடும்பத்திற்கு வீடு கையளிப்பு

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலையடித்தோனா கிராமத்தில் வீடின்றி மிகவும் துன்பப்பட்ட குடும்பமொன்றுக்கு சமத்துவம் மக்கள் நலன் ஒன்றியத்தினால் வீடு கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மதகுரு சிவஸ்ரீ ரதிகரன் மற்றும் சமத்துவ அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கு கொண்டு பால் பொங்கி, பொங்கலிட்டு, சமய கிரியை நிகழ்த்தி இறை ஆசியுடன் பயனாளியிடம் வீட்டினை கையளித்தனர்.

சமத்துவ மக்கள் நலன் ஒன்றியத்தின் ஜரோப்பிய நாடுகளுக்கு பொறுப்பான விஜயகுமார் ஜீவா தம்பதிகளின் மகனான ஜானந்தனின் பிறந்தநாள் நினைவு பரிசாக இவ்வீடு வழங்கப்பட்டுள்ளது.

வறுமை நிலையில் வாழ்ந்து வந்தவர்களின் வீடானது தீயில் எரிந்து நாசமாகியதால் சுட்டெரிக்கும் வெயில் பொலித்தின் மற்றும் தகரம் கொண்டு அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டில் பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்திருந்தனர்.

இவர்களது அவல நலமை தொடர்பாக மதகுரு சிவஸ்ரீ ரதிகரன் சமத்துவம் மக்கள் நலன் அமைப்பிடம் இவர்களுக்கு வீடொன்று அமைத்து கொடுக்க வேண்டிய தேவை தொடர்பாக விடுத்த வேண்டுகோளினை அடுத்து இவ் மனித நேய உதவி வழங்கப்பட்டுள்ளது

Related Articles

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்தப் பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில், பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். பத்தனை நகரைச் சேர்ந்த வீரமலை மலர்விழி (வயது 52)...

டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து மாயமான யுவதியின் சடலம் மீட்பு!

பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல்போயிருந்த யுவதியின் சடலம் நேற்று மாலை 7 மணியளவில் மீட்கப்பட்டது எனத் திம்புல பத்தனைப் பொலிஸார் தெரிவித்தனர். பத்தனையைச்...

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு தொற்று

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார். தபால் நிலையத்தின்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்தப் பகுதியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

டெவொன் நீர்வீழ்ச்சியை அண்மித்த பகுதியில், பெண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். பத்தனை நகரைச் சேர்ந்த வீரமலை மலர்விழி (வயது 52)...

டெவோன் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து மாயமான யுவதியின் சடலம் மீட்பு!

பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல்போயிருந்த யுவதியின் சடலம் நேற்று மாலை 7 மணியளவில் மீட்கப்பட்டது எனத் திம்புல பத்தனைப் பொலிஸார் தெரிவித்தனர். பத்தனையைச்...

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு தொற்று

பிலியந்தலை தபால்நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க எல்லாவல தெரிவித்துள்ளார். தபால் நிலையத்தின்...

வலிகாமம் மேற்கு பிரதேச சபை காவலாளி உண்ணாவிரத போராட்டத்தில்!

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர் பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் மோதியதில் பாதசாரி பரிதாபகரமாக பலி

கம்பஹா யக்கல வீதி, நெழும் மாவத்தைக்கு அருகில் இன்று (02) காலை கம்பஹா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் குறித்த பாதசாரி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்...