24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரபல நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு காலமானார்.

தமிழ் திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் டெல்லி கணேஷ்.

ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனித்துவ பாணியைப் பின்பற்றிச் சாதித்தவர்.

டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இவரின் மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.

டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார்.

தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில் நாயகன், அபூர்வ சகோதரர்கள், சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உட்பட 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles