25.3 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பிரான்ஸில் தலை துண்டிக்கப்பட்ட ஆசிரியர்; இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு காரணம் என்ன?

பிரான்ஸ் ‘இவ்லின்’ மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றுக்கு அருகாமையில் ஆசிரியர் ஒருவர் ஒக்ரோபர் 16ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

‘கொன்பிலோன் சென் ஒனோரின்’ என்ற கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் கத்தியுடன் காணப்பட்ட ஒருவரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்ட வேளை அந்த நபர் தப்பி ஓட முயற்சித்தார்.

காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் கத்தியுடன் காணப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் ‘எரானி’ என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது.

கொலையுண்ட ஆசிரியர் வரலாறு, பூமி சாத்திரம் ஆகிய பாடங்களைக் கற்பித்து வருபவர்.

அவர் சர்ச்சைக்குரிய ‘சார்லி ஹெப்டோ’ பத்திரகையில் வெளிவந்த சித்திரத்தை வகுப்பில் காண்பித்து விளக்கியுள்ளார்.

இவரது வகுப்பில் இஸ்லாமிய மாணவர்களும் இருந்தார்கள்.

இந்த ஆசிரியர் இஸ்லாமிய மாணவர்களின் பெற்றோர்கள் மிரட்டப்பட்டிருந்தார்.

இதனால் குறிப்பிட்ட ஆசிரியர் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

ஆசிரியரைக் கொலை செய்தவர் ரஷ்ய நாட்டின் செச்செனியாவைச் சேர்ந்தவர் என்றும், காவல்துறையினர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது அல்லாஹு அக்பர் என்று குரல் எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட முப்பத்து மூன்றாவது வன்முறைத் தாக்குதல் இது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு பிரான்ஸின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், கல்வி அமைச்சர் ஜோன் மிசேல் ப்ரோக்கர் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்துள்ளனர்.

“இன்று பிரான்ஸ் குடியரசு தாக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர், கல்லூரி ஆசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரை நினைத்து பார்க்கிறேன். எமது ஒற்றுமையின் இறுக்கமான தன்மைகளைக் கைக்கொண்டு இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொண்டு முறியடித்து வெற்றி கொள்வோம்” என கல்வி அமைச்சர் தமது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

“ஆசிரியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எங்கே செல்கிறது பிரான்ஸ் நாடு? இஸ்லாமிய தீவிரவாதத்தை எமது படை கட்டமைப்புக்களைக் கொண்டு இல்லாது ஒழிக்க வேண்டும். இஸ்லாமிய தீவிரவாதம் போருக்கு அழைக்கிறது”என்று ‘ரசம்புளுமோ நஷனல்’ கட்சியின் தலைவி மேரி லூ பென் தெரிவித்துள்ளார்.

“பிரான்ஸ் நாட்டில் யாவரும் சுதந்திரமாக கருத்து வெளியிடலாம். கல்லூரி ஆசிரியர் ஜனநாயகத்தை நிலைப்படுத்தி சுதந்திரமாக கருத்து வெளியிடுவதை பற்றியே வகுப்பு நடத்தியிருந்தார். அவரையே இஸ்லாமியப் பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். ஆசிரியர்கள் அனைவருக்கும் அருகில் அரசாங்கம் இருக்கும். அவர்களுக்கான பாதுகாப்பு வழங்கப்படும்” என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles