புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதல் ஆரம்பம்!

0
217

நாட்டில் 24 தொலைதூரப் பகுதிகளில் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ள மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்திலிருந்து புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சுமார் 72 சொகுசு மற்றும் அதி சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.