முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளின் தொடர்ச்சியான தொந்தரவால் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கோம்பாவில் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கர்ணன் குடியிருப்பு கிராமத்தில் விவசாயத்தோட்டத்திற்குள் நுழைந்த கட்டாக்காலி மாடுகள் வெண்டி,பயிற்றை,பூசணி போன்ற பயிர்களை அடியோடு அழித்து நாசமாக்கியுள்ளன.
மேட்டுப் பயிர்ச்செய்கையை நம்பி வாழும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை தொடர்ச்சியாக கட்டாக்காலி மாடுகள் சேதப்படுத்தி வருவதனால் விவசாயிகள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தி விவசாயத்தை மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கமக்கார அமைப்பு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை பொறுப்பான அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியபோதிலும்,அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.