புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில், கப் ரக வாகனம், சொகுசு கார் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளான நிலையில், காரில் பயணித்தவர்கள், தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

நேற்று மாலை, புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில், நீர் வழங்கல் அதிகார சபை அலுவலகத்திற்கு முன்பாக, இந்த விபத்து பதிவானது.புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற கப் ரக வாகனம், கட்டுப்பாட்டை இழந்து அனுராதாபுரம் பகுதியில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற சொகுசு காருடன் மோதி விபத்திற்குள்ளானது.
இதனால், கார் தலைகீழாக கவிழ்ந்த போதும், காரில் காரில் பயணித்தவர்கள், தெய்வாதீனவமாக உயிர் தப்பியுள்ளனர்.அதனையடுத்து, கப் ரக வாகனத்தின் சாரதி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.