தொம்போ, பூகொட பகுதியை சேர்ந்த ஆடை கைத்தொழிற்சாலை ஊழியரான பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைத்தொழிற்சாலையில் ஊழியர்கள் 50 பேரிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரிந்திவெல பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி முதல் குறித்த கைத்தொழிற்சாலையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.