கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பூகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக ராகமை போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
21 வயதான குறித்த இளைஞனின் உயிரிழப்பு குறித்து விசேட விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் திடீர் சுகயீனம் காரணமாக ராகமை போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதற்கமைய கொழும்பு குதிரையேற்றப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹாண தெரிவித்தார்.
அந்த விசாரணைகளுக்கு அமைய பூகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அல்லது அந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் எவரேனும் தேவையற்ற விதத்தில் நடந்துக்கொண்டமை தெரியவந்தால், அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.