27 C
Colombo
Thursday, September 28, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பேச்சாளர் இல்லாத கூட்டமைப்பு

இந்த தலைப்பை எழுதிக் கொண்டிருக்கும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு என, ஒரு உத்தியோகபூர்வ பேச்சாளர் இல்லை. ஏனெனில் கடந்த 7.10.2020 அன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் எந்தவொரு இறுதி முடிவும் இல்லாமல் இந்த விவகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டத்தில் இந்த விவகாரம் பேசப்பட்டபோது, இதுவரை கூட்டமைப்பின் பேச்சாளராக அறியப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் பேச்சாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அடுத்த பேச்சாளர் யார் என்பதில்தான் இழுபறிகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் நோக்கினால் தற்போது கூட்டமைப்பிற்கென்று எந்தவொரு பேச்சாளரும் இல்லை.

தேர்தல் முடிவுற்று மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால் ஒரு சாதாரண பேச்சாளர் விவகாரத்தை கூட்டமைப்பின் தலைவர்களால் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. தங்களுக்குள் உள்ள பிரச்சினையை தீர்க்க முடியாத இவர்கள்தான் இந்தியாவை, சர்வதேசத்தை கையாளப் போவதாக கூறுகின்றனர். சம்பந்தன் உண்மையிலேயே ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் என்பது உண்மையாயின், இந்த பிரச்சினையை தீர்ப்பது ஒரு விடயமே அல்ல. இவர்தான் அடுத்த பேச்சாளர். இதுதான் எனது இறுதியான முடிவு. விரும்பமில்லாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறிவிட்டு விடயத்தை கையாள முடியும். ஆனால் அவ்வாறானதொரு தலைமைத்துவம் சம்பந்தனிடம் இல்லை. அதே வேளை இதுதான் எங்களுடைய நிலைப்பாடு என பங்காளிக் கட்சிகள் உறுதியாக கூறுவதன் மூலமும் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். கூட்டமைப்பு என்பது அடிப்படையில் ஒரு அரசியல் கட்சியல்ல. அது கட்சிகளின் தேர்தல்கால கூட்டு மட்டுமே. ஒரு அரசியல் கட்சிகளின் கூட்டின் ஜனநாயக ரீதியான முடிவுகள் எப்போதும் கட்சிகளின் அடிப்படையிலதான் எடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. ஆனால் இந்த ஆகக் குறைந்த ஜனநாயக ஒழுங்கைக் கூட கூட்டமைப்பால் ஏற்படுத்த முடியவில்லை.

ஆரம்பத்தில் கூட்டமைப்பின் பேச்சாளராக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இருந்தார். அவர் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுமந்திரன் அந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். கடந்த ஐந்து வருடகால கூட்டமைப்பின் நகர்வுகளில் சுமந்திரனே பிரதான பங்கு வகித்திருந்தார். சுமந்திரனின் அரசியல் நகர்வுகள் அனைத்தும் படுதோல்வியடைந்தன. சுமந்திரன் ஒரு பேச்சாளராகவும் தோல்வியடைந்தார். அதே வேளை சுமந்திரன் அவ்வப்போது தெரிவித்த கருத்துக்கள் கூட்டமைப்பின் பின்னடைவிற்கு முக்கியமான காரணமென்னும் ஒரு பார்வை பலரிடம் உண்டு. தமிழரசு கட்சியை சேர்ந்த சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி தவராசா போன்றவர்கள் அவ்வாறான கருத்தை பொது வெளியிலும் முன்வைத்திருக்கின்றனர். கூட்டமைப்பின் பங்காளிகளான டெலோவும், புளொட்டும் சுமந்திரனை ஏதோவொரு வகையில் பதவியிறக்கியிருக்கின்றோம் என்னும் தோற்றத்தை காண்பிப்பதன் ஊடாகவே அடுத்துவரும் மாகாண சபைத் தேர்தலில், தங்களால் மூச்சுவிட முடியுமென்று நம்புகின்றனர். உண்மையில் இவர்கள் பேச்சாளர் விவகாரத்தை கையிலெடுத்தது உண்மையில் பேச்சாளர் பதவியை பெறுவதற்காக அல்ல மாறாக, சுமந்திரனால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை தடுப்பதற்காகவே. ஆனாலும் இவர்களின் தளம்பல் போக்கால் இன்றுவரையில் சுமந்திரனை அகற்றும் முயற்சியில் இவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

பேச்சாளர் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கிய போதே, சுமந்திரன் அதற்கு எதிரான காய்களையும் நகர்த்தத் தொடங்கிவிட்டார். மற்றவர்கள் தன்னை நோக்கி விரல் நீட்டுவதற்கு அவகாசம் வழங்காமல், தானே விலகுவதாக அறிவித்துவிட்டார். அதே வேளை அடுத்தவர் என சிறிதரனையும் காட்டியிருக்கின்றார். தந்திரோபாயமாக பேச்சாளர் பிரச்சினையை சிறிதரனின் பிரச்சினையாக மாற்றியிருக்கின்றார். இந்த நிலையில்தான் இன்று கூட்டமைப்பு பேச்சாளர் இல்லாத அமைப்பாகியிருக்கின்றது. ஒரு பேச்சாளர் விவகாரத்தைக் கூட, திறமையாக கையாளும் திறனற்ற, சம்பந்தனே, மீண்டும் கூட்டமைப்பின் தலைவராக ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றார்.

  • ஆசிரியத் தலையங்கம்
  • ஈழநாடு

Related Articles

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு ஏறாவூரில் மாபெரும் மீலாத் ஊர்வலம்

மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.இந்நிகழ்வில்...

அம்பாறை சாய்ந்தமருதில் தேசிய மீலாத்விழா நிகழ்வுகள்

அம்பாறை சாய்ந்தமதில் தேசிய மீலாத்விழா, சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நிர்வாகசபையினரின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்றது.அல் அக்பர் ஜூம்மாப்பள்ளி வாசலின் நம்பிக்கையாளர் சபையின் தவைர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில், தூ...

மட்டக்களப்பு காத்தான்குடியில் மீலாத் சிறப்பு கவியரங்கு

மட்டக்களப்பு காத்தான்குடி முதலாம் குறிச்சி கலாநிதி அலவி சரிப்தீன் முன்னோடி பாடசாலையில், மீலாத் சிறப்புகவியரங்கு நடைபெற்றது.காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் ஏற்பாட்டில், கழகத்தின் தலைவர் கவிமாமணி ரீ.எல்.ஜௌபர்கானின்வழி நடாத்தலில் கவியரங்கு...

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கு புதிய பஸ் வண்டி

அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசியபாடசாலைக்கான புதிய பஸ் வண்டியினை ஜக்கியமக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச இன்றுவழங்கினார்.பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் ஊடாக 79ஆவது பஸ் வண்டியினை பாடசாலையின்...

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னம் கையளிப்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 1996 ஆம் ஆண்டு பழைய மாணவர்களினால் கல்லூரியின் நினைவு சின்னமாக ஒரு தொகை பென்ரைவ் இன்று கையளிக்கப்பட்டது.150வது ஆண்டினை நினைவு கூறும் வகையில் கல்லூரியின்...