நுவரெலியா, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவில் இன்று காலை 08 பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்தபோது, மரம் ஒன்றில் இருந்த குளவிகூடு கலைந்ததால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதில் 8 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் 2 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.