பொதுத்தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் காரணமாகவும், 15 ஆம் திகதி பௌர்ணமி தினத்தை முன்னிட்டும் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தினங்களில் அனுமதிச் சட்டத்தை மீறல் மற்றும் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் பணிப்புரை விடுத்துள்ளார்.