நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நேற்று வரை 939 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 273 முறைப்பாடுகளும்,
மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 635 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதேவேளை மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 10 முறைப்பாடுகளும்,
ஏனைய விடயங்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.