26 C
Colombo
Saturday, April 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொம்மைவெளி மக்களின் போராட்டம்: அமைச்சரை அனுப்பிய பிரதமர்

யாழ்ப்பாணம் பொம்மைவெளி மக்களின் போராட்டம் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
அதனால், இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
காலை 10 மணியளவில், உடுவில் சுன்னாகம் தெற்கு கிராம சேவகர் பிவிவுக்குற்பட்ட சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் 81 குடும்பங்களை சேர்ந்த 259 பேர் வசித்து வருகின்றார்கள்.
1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மயிலிட்டி மற்றும் தையிட்டி பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்தவர்களே 30 வருடங்களாக நலன்புரி நிலையத்தில் வசித்து வருகின்றனர்.
நலன்புரி நிலையத்தை பார்வையிட்ட இராஜாங்க அமைச்சர் அங்கு வசித்துவரும் மக்களுடைய கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
இதன்போது தங்களுடைய சொந்த காணிகளில் சென்று வாழ்வதற்கான எற்பாடுகளை செய்து தருமாறு மக்கள் இராஜாங்க அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மக்களின் கோரிக்கை தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் நல்லதொரு முடிவினை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் மக்களிடம் உறுதியளித்தார்.

Related Articles

மிருசுவில் கொலை தொடர்பில் மூவர் கைது!

கொலை தொடர்பாக மகன்கள் உட்பட மூவர் கைது!! தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர் வெட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரது இரு மகன்களும்...

முன்னாள் எம் பி சரவணபவனால் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

தமிழர் தேசத்தின் ஆன்மாவைச் சிதைத்தழிக்கும் சிங்கள தேசத்துக்கு எதிராக நாளை சனிக்கிழமை சங்கானை சந்தை முன்பாக காலை 9.30 மணிக்கு அறவழியில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மிருசுவில் கொலை தொடர்பில் மூவர் கைது!

கொலை தொடர்பாக மகன்கள் உட்பட மூவர் கைது!! தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர் வெட்டைக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரது இரு மகன்களும்...

முன்னாள் எம் பி சரவணபவனால் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு!

தமிழர் தேசத்தின் ஆன்மாவைச் சிதைத்தழிக்கும் சிங்கள தேசத்துக்கு எதிராக நாளை சனிக்கிழமை சங்கானை சந்தை முன்பாக காலை 9.30 மணிக்கு அறவழியில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ; துருக்கி அங்கீகாரம்

நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைவதற்கு துருக்கியின் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்மூலம் நேட்டோவின் 31 ஆவது அங்கத்தவராக பின்லாந்து விரைவில் இணையவுள்ளது. ரஷ்யாவின் எல்லையில் பின்லாந்து...

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

லிந்துளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிந்துளை பேரம் தோட்டபகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிர்ழந்துள்ளதோடு, மற்றுமொரு நபர் லிந்துளை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளதாக லிந்துளை பொலிஸார் தெரிவித்தனர்.