விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை சித்தங்கேணி இளைஞரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாகவும், இயற்கை மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இல்லை எனவும் உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மரக்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்ட இளைஞன் 12ஆம் திகதி மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட குறித்த இளைஞர் திடீர் சுகவீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்திருந்தார்