ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை எடுத்து சென்ற நான்கு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன், டிக்கோயா, சாஞ்சிமலை பகுதியைச் சேர்ந்த நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இளைஞர்களிடம் ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.