போலந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்!

0
8

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை போலந்து வகிக்கும் சூழலில், போலந்து குடியரசின்  வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி, 2025 மே 28 முதல் 31 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது,  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து, கலந்துரையாடல்களில்  ஈடுப்படவுள்ளனர். 

அத்துடன், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத்துடன் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.