27 C
Colombo
Monday, February 26, 2024
12,987FansLike
19,993SubscribersSubscribe

மக்களின் நன்மைக்காக எத்தனை பேரையும் தனிமைப்படுத்த தயார்

நாட்டில் 2,000 பேரைத் தனிமைப்படுத்தக்கூடிய மையங்களைத் அமைத்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இராணுவ தளபதி இந்த கருத்தினை தெரிவித்தார்.

அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையங்கள் போதுமானதாக இல்லை எனவும், தற்போது சுமார் 10,500 பேர் வரையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

´தற்போதைய சூழலில் இரண்டாயிரம் பேரைத் தனிமைப்படுத்தக்கூடிய மையம் அமைக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் தற்போதைய நிலையில் 96 வயதிற்குட்பட்ட 10,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாங்கள் போதாது என்று மிகப் பெரிய எண்ணிக்கையிலானவர்கள் சொன்னார்களா? நாம் இதுவரை 51,000 க்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தி சமூகத்துடன் இணைத்துள்ளோம். எனவே, முடியாதது என்று எதுவும் இல்லை. நாட்டு மக்களின் நன்மைக்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் இராணுவம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயார்.´

இதேவேளை, மினுவாங்கொட கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொத்தனியில் முதலாவதாக அடையாளம் காணப்பட்டவர் யார் என்பது குறித்தும் இராணுவத் தளபதி தெளிவுப்படுத்தினார்.

´அந்த பெண் நோய்வாய்ப்படுவதற்கு முன்னர் அவருக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளன. அவரை பின் தொடர்ந்த போது சுமார் 33 பேர் கொண்ட குழு அதே நோய் அறிகுறிகளை கொண்டுள்ளமை உறுதியானது. இவ்வாறு தேடி வருகின்றோம். இப்படி இருக்கையில் இதுதான் ஆரம்ப புள்ளி என எந்தவித நம்பிக்கையுமின்றி சொல்வதில் நியாயமில்லை.´

புலனாய்வு பிரிவு உட்பட அனைத்து இராணுவமும் சுகாதார பாதுகாப்பிற்காக செயற்பட்டு வந்தாலும் அதனால் எந்த வகையிலும் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படவில்லை எனவும் இராணுவ தளபதி கூறினார்.

அனைத்து அதிகாரிகளும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் 14 வது வருட நிறைவு நிகழ்வு

வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் திட்டங்களின் 14 வது ஆண்டுநிறைவு நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில்நடைபெற்றது.வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான...

தந்தையானார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தானும் தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாகவும் தற்போது ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு...

மார்ச் மாதத்தில் விலைகள் குறைவடையும்’

ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பிரதிபலனை அடுத்த மாதம் முதல் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி கடந்த...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் 14 வது வருட நிறைவு நிகழ்வு

வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் திட்டங்களின் 14 வது ஆண்டுநிறைவு நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில்நடைபெற்றது.வன் சைல்ட் பவுண்டேஷன் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான...

தந்தையானார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தானும் தற்போது ஒரு குழந்தைக்கு தந்தையாகிவிட்டதாகவும் தற்போது ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு...

மார்ச் மாதத்தில் விலைகள் குறைவடையும்’

ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பிரதிபலனை அடுத்த மாதம் முதல் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி கடந்த...

‘போருக்கு பிறகு இதுதான் நடக்கும்’

ஹமாஸ் உடனான போர் நிறைவுற்ற பிந்தைய திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதே...

ஜம்பெட்டா வீதி துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு காயம்

கொழும்பு, ஜம்பெட்டா வீதி, நியூன்ஹம் சதுக்கத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.அடையாளம் தெரியாத இரு மோட்டார் சைக்கிள் துப்பாக்கிதாரிகள் பாதிக்கப்பட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு...