‘புதிய தொரு வீடு’ நாடக இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடக அரங்க ஆசிரியர் கழக அனுசரணையுடன், ‘புதிய தொரு வீடு’ நாடக நெறியாள்கை பேராசிரியர் மௌனகுரு தலைமையில் மட்டக்களப்பு வின்செட் மகளிர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை ஆசியர்களின் பங்கு பற்றுதலுடன் தயாரிக்கப்பட்ட ‘புதிய தொரு வீடு’ நாடகம் நான்கு ஆண்டுகளுக்குப் பின் நாடக நெறியாள்கையாளர் பேராசிரியர் மௌனகுரு அவர்களினால் மீண்டும் இன்றைய தினம் கிழக்கு மாகாணக் கல்வித்திணைக் களத்தின் ஏற்பாட்டில் பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்களுக்காக காட்சிப்படுத்தப் பட்டு இன்று நாடகம் இறுவெட்டாக வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வில் கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம், பேராசிரியர் மௌனகுரு, நாடக அரங்க ஆசிரியர் கழக ஆசிரியர்கள், மாணவர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர் .
இதன்போது நாடக அரங்க ஆசிரியர் கழக ஆசிரியர்களினால் பேராசிரியர் மௌனகுரு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது