மட்டக்களப்பு ஆயித்தியமலைப் பகுதியில் கிணற்றிலிருந்து வயோதிபரொருவரின் சடலம் மீட்பு

0
21

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர் வயற்பிரதேசத்தில் கிணறொன்றிலிருந்து, வயோதிபரின் சடலம்
நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேசத்தைச்சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தம்பிராசா தவராசா என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவர்.

நீண்டநாட்களாக நோயினால் பிடிக்கப்பட்டிருந்த இவர் நேற்று மதியம் முதல் காணாமல் போயிருந்த நிலையில்,
அவரை உறவினர்கள் இணைந்து தேடியபோது கிணற்றில் சடலத்தை அவதானித்துள்ளனர். திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம்.நசிர் சம்பவ இடத்திற்கு சென்று முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆயித்தியமலை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.