மட்டக்களப்பு,ஏறாவூர் மீலாத் குழுவின் ஏற்பாட்டில் அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் உலமாக்கள் பேரவையின்
வழிகாட்டலில், மாபெரும் மீலாத் ஊர்வலம் இன்று நடைபெற்றது..
ஊர்வலத்தினை தொடர்ந்து மார்க்க பிரசங்கம் மற்றும் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அலிஸாஹிர் மௌலானா, மத்ரசா நிர்வாகிகள், பொது மக்கள்
என பலர் கலந்து கொண்டனர்.