மட்டக்களப்பு ஏறாவூர் ஐயங்கேணி விசேட தேவையுடைய மாணவர்களை உள்ளடக்கிய ஹிஸ்புழ்ழா வித்தியாலயத்தின் முப்பது வருடகால பூர்த்தியை முன்னிட்டு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் எச்எம்எம். பஷீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மறைந்த முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா மற்றும்அவரது பாரியார் சப்றியா முஸ்தபா ஆகியோரின் நினைவாக பாடசாலையில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா, வகுப்பறைக்கட்டடம் ஆகியன கையளிக்கப்பட்டது.
விழாவில் தொழிலதிபர் றிஸ்லி முஸ்தபா பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார்.
நிகழ்வின் போது பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஜி.ஏ.நாஸர் பொன்னாடைபோர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
முப்பெரும் விழாவினை சிறப்பிக்கும் வகையில் நூறு வறிய குடும்பங்களுக்கு பகல் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.