மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் – ஐயங்கேணி ஹிஸ்புழ்ழாஹ் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முப்பெரும் விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. சுமார் முப்பத்தாறு வருடகால கல்விச் சேவையின் பின்னர் சுயவிருப்பில் ஓய்வுபெறும் அதிபர் எச்எம்எம். பஷீருக்கான பிரியாவிடை,
சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஜி.ஏ.நாஸர் புதிய அதிபராக கடமைப்பொறுப்பேற்றல் மற்றும் இப்பாடசாலையின் முப்பது வருடகால கல்வி வரலாற்றில் தடம் பதித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா ஆகியன ஒருங்கே நடைபெற்றன.
புதிய அதிபர் எம்.ஜி.ஏ. நாஸர் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி பிரதம அமைப்பாளர் ஏ.எம்.எம்.பிர்தௌஸ், சமூக சேவகர் கே.எல்.நவாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரியாவிடை பெற்றுச்செல்லும் அதிபர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பா வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இப்பாடசாலையில் ஆசிரியராகக் கடமையேற்ற எம்.ஜிஏ. நாஸர் பாடசாலையின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய வழிகாட்டியதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
தற்போது புதிதாக இப்பாடசாலையில் அதிபராகக் கடமையேற்றுள்ள எம்.ஜி.ஏ.நாஸர் சுமார் முப்பத்தாறு வருடங்கள் கல்விப்பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.