மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்றது.
காலை 8.30 மணி முதல் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகள் சார்பில் பிரதி நிதிகளும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.