மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலும் இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிக ஆர்வத்துடன் வாக்களிப்பில்; ஈடுபட்டனர்.
காத்தான்குடி பொலீஸ் நிலையத்தில் 96 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். வாக்களிப்பின் போது கட்சிகளின் முகவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.