மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள புதிய காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை இன்று
பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
மாணவர்களால் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் விற்பனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. பாடசாலை அதிபர் றபீக்கா உவைஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்