இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும், கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்ரீஸ்வரர் ஆலய, வருடாந்த மஹோற்சவம் இன்று அதிகாலை, ஆயிரக்கணக்கான அடியார்கள் சூழ கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் இடம்பெற்று,கொடிச்சீலை ஆலயத்தினை சூழ வலம்வந்தது. கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் இடம்பெற்றதுடன் வேதபாராயணத்துடன் மேள நாதஸ்வர இசை முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர்ஆலயத்தின் தேரோட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 22ம் திகதி நடைபெறவுள்ளதுடன் 23ம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.