மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை தீவுப் பகுதிக்குள், நேற்றைய தினம் உட்புகுந்த காட்டு யானைகள் விவசாயப் பயிர்களை நாசப்படுத்தியுள்ளன.
கொம்மாதுறை தீவுப் பகுதியில், விவசாயிகள் தங்குவதற்காக அமைத்திருந்த இருப்பிடங்களையும் யானைகள் சேதப்படுத்தியதுடன், சேமித்து வைக்கப்பட்டிருந்த
நெல்லையும் யானைகள் உட்கொண்டுள்ளன.
காட்டு யானைகளால் தொடர்ச்சியாக தமது விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டும் விவசாயிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இது தொடர்பில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.