மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில், மகிழ்ச்சியான கிராம வேலைத்திட்டம்தொடர்பில் விளக்கமளிப்பு

0
17

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மகிழ்ச்சியான கிராமம் நிகழ்ச்சி திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான விளக்கமளிக்கும் நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றது.
பிரதேச செயலாளர் என்.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அனட் ஜோதிலட்சுமி, வைத்தியர் எம்.அச்சுதன், சுகாதார கல்வி உத்தியோகத்தர் தஜிகரன், சுகாதார மேற்பார்வை உத்தியோகத்தர் வீ.ரமேஸ்குமார் மற்றும் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர், பிரதேச அரச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள்
என பலர் கலந்து கொண்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 24 கிராம பிரிவுகளிலும் 24 மகிழ்ச்சியான கிராமங்களை உருவாக்குதல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன். பிரதேசத்திலுள்ள அரச திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான கிராமம் பற்றிய விளக்கமும் வழங்கப்பட்டது. அனைத்து பிரதேசங்களிலும் தேசிய ரீதியில் இந்த மகிழ்ச்சியான கிராமம் வேலைத் திட்டம் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.