மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு

0
13

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வுகள், ஏறாவூர் ஹிஸ்புல்லா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றன.
வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் நழீமி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

உதவிக்கல்விப்பணிப்பாளர் சித்தீக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்
பாடசாலை அதிபர் எம்.ஜி.ஏ.நாஸர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஏறாவூர் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள விசேட
தேவையுடையோர் பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும்
இவ்விழாவில் கலந்துகொண்டனர். மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேற்றப்பட்டன.