மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி செயற்றிட்டம் ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் நிறைவுற்ற நிலையில்,
இன்று திறந்து வைக்கப்பட்டன.
நாவற்குடா பொதுச்சந்தையில் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி மாநகரசபையின் ஆணையாளர் என்.மணிவண்ணனால்
திறந்து வைக்கப்பட்டது.
உள்ளூர் உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதன் ஊடாக கிராமிய பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த கடைத்தொகுதி
அமைக்கப்பட்டுள்ளது.
கடைத்தொகுதியை அமைப்பதற்கு மட்டக்களப்பு மாநகரசபையின் 24 மில்லியன் ரூபாவும், உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி செயற்றிட்டத்தின்
கீழ் 24 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

இதேபோன்று மட்டக்களப்பு பிரதான பொதுச்சந்தைக்கு அருகில் பல்துறை உணவு அங்காடியாது திறந்துவைக்கப்பட்டது.
சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்புக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் நன்மை கருதி இந்த பல்துறை உணவு அங்காடியாது
உலக வங்கியின் 4.3மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டிலும், மட்டக்களப்பு மாநகரசபையின் 4.28 மில்லியன் ரூபா செலவிலும்
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் பொதுச்சந்தையில் மேல் தளத்தில் நிறுவப்பட்டுள்ள சூரியசக்தியலான மின் உற்பத்தி தொகுதியும் இன்று
திறந்துவைக்கப்பட்டது.
மாநகரசபையின் கோரிக்கைக்கு அமைவாக சோலர் எனர்ஜி நிறுவனத்தினால் குறித்த சூரியசக்தியலான மின் உற்பத்தி தொகுதி அமைக்கப்பட்டு
திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளில் மாநகரசபையின் ஆணையாளர் என்.மணிவண்ணன், மாநகரசபையின் கணக்காளர் திருமதி சிவராஜா உட்பட பலர்
கலந்துகொண்டனர்.
