மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியளாலர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு, நேற்று (14) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியளாலர்களுக்கான அனர்த்தம் மற்றும் ஊடக சுதந்திரம், ஊடக சுதந்திர உரிமை தொடர்பான பயிற்சிக்கருத்தரங்கு நேற்று (14) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அனர்த்தங்களில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினுடாக மக்களை எவ்வாறு அனர்தங்கள் நிகழும் போது பாதுபாப்பது என்பது தொடர்பான பயிற்சிக்கருத்தரங்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
அனர்தங்கள் இயற்கையாகவும் செயற்கையாகவும் அதாவது மனிதர்களாளும் எற்படுவதற்கான அதிகளவு வாய்ப்புக்கள் உள்ள வேளைகளில் பத்திகையாளர்கள் எவ்வாறு மக்களுக்கு செய்திகளை வழங்குவது என்பன பற்றிய விடையங்கள் ஊடகவியலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படது. இப்பயிற்சிக்கருத்தரங்கானது அரசாங்கத்தின் விரிவான நிலைபெறான அபிவிருத்தி செயல் திட்டத்தினுடாகவே செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் அனர்த்தங்களின்போது சிறுவர்கள் முதியவர்கள் மற்றும் ஏனை மக்களையும் அனர்தங்களில் இருந்து எவ்வேளையும் பாதுகாப்புடனும் மீட்பதற்கு அரச உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஊடகவியலாளர்களின் பங்களிப்பு அவசியம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
நேற்று (14) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பயிற்சிக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் வளவாளர்களாக ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் நேத்ரா தொலைக்காட்சியின் பொறுப்பாளரும் பிரதிப்பணிப்பாளருமான கலாநிதி எஸ்.மேசஸ், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எ.நவேஸ்வரன், உலக வரைபட நிபுணர் சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டார்.