மட்டக்களப்பு வவுணதீவில் சட்டவிரோத வடிசாராய விற்பனைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

0
51

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள பருத்திச்சேனை மங்கையர் கொத்தணியின் ஏற்பாட்டில் சட்டவிரோத வடிசாராய விற்பனைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

பேரணி பருத்திச்சேனை கிராமத்தில் இருந்து ஆரம்பமாகி தாண்டியடி கிராமத்திற்கு சென்று அங்குள்ள விஷேட அதிரடிப்படையினருக்கு போதைப் தடுப்பு தொடர்பான
மகஜர் கையளிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பேரணி குறிஞ்சா முனை ஊடாக வவுணதீவுக்கு சென்று வவுணதீவு பொலிஸாருக்கு மகஜர் கையளிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மண்முனை மேற்கு பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலாளரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

பருத்திச்சேனை, காயான்மடு, புதுமண்டபத்து உள்ளிட்ட கிராமங்களை அண்டிய பகுதிகளில் மிக மோசமாக சட்டவிரோத வடிசாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கூறியே மங்கையர் கொத்தணி மற்றும் கிராம மக்கள் இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.