மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள், தேசிய மட்ட, உடற்பயிற்சி கண்காட்சியில், தங்கப் பதக்கத்தினைச் சுவீகரித்துக்கொண்டனர்.
தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்த, மாணவிகளையும், தேசிய மட்ட தைக்வுண்டோ போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்த வை.தாரணி மற்றும் வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்த எஸ்.அனந்தினி ஆகியோரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
சாதனை மாணவிகள், மாணவிகளின் பயிற்றுவிப்பாளர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு, பாடசாலை மண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.லவக்குமார் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் , பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் , பாடசாலை பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்
மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் பங்கேற்றனர்.
தேசிய நிலையில் மாணவிகள் சிறந்து விளங்க உதவிய, பொறுப்பாசிரியர்களான சுவிடா பிரியாலினி தர்சன், ஆசிரியர் செல்வி எமா குளோரியா மற்றும் உடல்கல்வி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.