நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் விசேட பொலிஸ் பாதுகாப்புடன் மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றமும், ஆலய வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாத்திமா அன்னையின் திருச்சுரூப வழிபாடும் நேற்று மாலை நடைபெற்றது .
105 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் போர்த்துக்கல் நாட்டில் பாத்திமா பதியில் மூன்று இடையர் சிறுவர்களுக்கு கட்சி அளித்த செபமாலை அன்னையை பாத்திமா மாதாவாக நினைவு கூறும் வகையில் மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பாத்திமா அன்னையின் திருச் சொரூபத்திற்கு விசேட வழிபாடும், புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றம் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் நேற்று மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் 104 வருடங்கள் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயமான மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா பங்குதந்தை அனிஸ்டன் தலைமையில் ஆரம்பமானதுடன் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட கூட்டுத்திருப்பலியுடன் ஆலய திருவிழா நிறைவுபெறவுள்ளது
ஆலய திருவிழா நவநாள் காலங்களில் விசேட திருப்பலிகள் இடம்பெற்று எதிர்வரும் சனிக்கிழமை மாலை புனிதரின் திருச்சொரூப பவனியும் ,ஞாயிற்றுக்கிழமை காலை அருட்தந்தை எக்ஸ் .ஐ .ரஜீவன் அடிகளாரின் தலைமையில் இடம்பெறவுள்ள கூட்டுத் திருப்பலியுடன் ஆலய திருவிழா நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .