31 C
Colombo
Monday, July 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.மாவட்ட அரச திணைக்கள
உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் கலாசார நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களின் பணியாற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான 200 மணித்தியாலங்களை கொண்ட 25 நாள் சிங்கள மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் கலாசார நிகழ்வு இன்று மாவட்ட உதவி மாவட்ட செயலாளர்
எ. நவேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றது

மாவட்ட செயலக தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உதவியாளர் வி .சந்திரகுமார் ஒழுங்கமைப்பில் மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் எ. நவேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மாவட்டஅரசாங்க அதிபர்
கே.கருணாகரன் கலந்துகொண்துடன்,கௌரவ அதிதியாக தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரசாத் சு.ஹெரத், விசேட அதிதியாக கணக்காய்வத்தியட்சகர் யு.ஆ.மாஹிர், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இரண்டாம் மொழி பயிற்சிக்கான வளவாளர்கள் , பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்

தேசிய கீதம்; மங்கள மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்களின் கலாசார நிகழ்வில் அதிதிகளின் சிறப்புரைகளும் பயிற்சி பெற்ற உத்தியோகத்தர்களின் கலாசார நிகழ்வுகளும் ,வளவாளர்களுக்கான நினைவு பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன

அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக் வழங்கப்பட்டு வரும் இப்பயிற்சி நெறியானது தேசிய இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரச திணைக்களங்களின் பணியாற்றும் தமிழ் மொழி மூலமான உத்தியோகத்தர்கள் சிங்கள மொழி ஆற்றலை விருத்தி செய்வதற்கும் உத்தியோகத்தர்களின் பணிகளை இலகுபடுத்திக் கொள்வதற்குமான சிங்கள மொழி மூலம் பயிற்சிகள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மட்டு.மாவட்ட விவசாயிகள் பால்சோறுவழங்கி தமது நன்றிகளை தெரிவிப்பு

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பால்சோறு பரிமாறினர்கள் தற்போது நாட்டில்...

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டு.மாவட்ட விவசாயிகள் பால்சோறுவழங்கி தமது நன்றிகளை தெரிவிப்பு

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருமான சமூக சேவையாளருமான முத்துக்குமார் செல்வராசாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் ஒன்றிணைந்து பால்சோறு பரிமாறினர்கள் தற்போது நாட்டில்...

திருமலை தனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தமக்கு சீராக எரிபொருள் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக பேருந்துகளை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோளைகட்டி சந்தி பகுதியை விடுவித்து மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் ராணுவ கட்டளை தளபதியிடம் கோரிக்கை!

ஒட்டகப்புலம் ,வசாவிளான் ,தோளைகட்டி சந்தி வரை விடுவித்து மக்களைமீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மறை மாவட்ட ஆயர் யாழ் மாவட்ட...

நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை ஆட்சியாளர்களையே சேரும்! யாழ் மறை மாவட்ட ஆயர் தெரிவிப்பு.

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட்  ஞானபிரகாசம் தெரிவித்தார்  இன்று...