24 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மனித கழிவுகளை குளப்பகுதியில் வீச வந்த நபரால் பதற்றம்!

வவுனியா தாண்டிக்குளம் குளப்பகுதியில் மனித கழிவுகளை வீசுவதற்கு வந்த நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கிபிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதுடன் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் நேற்று (16) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

நேற்று மாலை நபர் ஒருவர் துவிச்சக்கரவண்டி ஒன்றில் மரச்சாலையில் சடலங்களில் இருந்து அகற்றப்படும் கழிவுப்பொதியுடன் தாண்டிக்குளம் குளத்து பகுதிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்த இளைஞர்கள் சிலர் அவரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்ததுடன் அந்த பகுதி கமக்காரர் அமைப்பிற்கு தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கமக்கார்ர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் விடயம் தொடர்பாக வவுனியா பொலிசார் மற்றும் சுகாதார பிரிவிற்கு தகவல் வழங்கினர்.சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த நபரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மலர்சாலையின் உரிமையாளர் வரும் வரையில் வாகனத்தை நகரவிடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை செய்து குற்றவாளியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

இதனையடுத்து பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து அகன்று சென்றனர். இதேவேளை குறித்த கழிவுகளை வவுனியா கண்டி வீதிக்கு அண்மையில் உள்ள மலர்ச்சாலை ஒன்றில் இருந்தே எடுத்து வந்ததாக அதனை கொண்டுவந்த நபர் பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட நபர் அவர் கொண்டுவந்த கழிவுப்பொதிகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles