மன்னார் – வங்காலை புனித ஆனாள் ஆலய பங்கு மக்களுடன் வன்னி மண் அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் குருதிக்கொடை முகாம் இன்று காலை இடம்பெற்றது.
வங்காலை புனித ஆனாள் ஆலய வளாகத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 2.00 மணி வரை குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
‘உதிரத்தை தானம் செய்! உதிரப் போகும் ஒரு உயிர் உதிராமல் இருக்க காவல் செய்’ என்ற தொனியில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியினர் உதவிகளை வழங்கியிருந்தனர்.
சுமார் 50க்கும் மேற்பட்ட குருதி கொடையாளர்கள் குருதி தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது.