30 C
Colombo
Thursday, May 19, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

மஹிந்த விலகல் –
அடுத்தது என்ன?

மஹிந்தவின் பதவி விலகல் தொடர்பில் ஏற்பட்டுவந்த இழுபறிநிலைமை, தற்போது, முடிவுக்கு வந்திருக்கின்றது. ஆனாலும், இது முடிவுதானா – அல்லது பிறிதோர் ஆட்டத்துக்கான ஆரம்பமா, என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. தனது மகனை அரியணையில் அமர்த்தும் இலக்கோடு அரசியலில் விரதமிருந்துவந்த, மஹிந்த பேர்ஷி ராஜபக்ஷவின் பதவி விலகல், அவரைப் பொறுத்தவரையில் மோசமான அரசியல் பின்னடைவுதான்.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, சிங்கள தேசிய வாதிகளால், நவீன துட்டகைமுனுவாக போற்றப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, சிங்கள பெரும்பான்மையினராலும் யுத்த வெற்றி நாயகனாகப் போற்றப் பட்டார். இதனை மிகவும் தந்திரமாக, தனது அரசியல் முதலீடாக்கிக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, சேனநாயக்க, பண்டாரநாயக்க வரிசையில், ராஜபக்ஷ குடும்ப அரசியல் பரம்பரையொன்றை ஏற்படுத்துவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டார்.
சேனநாயக்க மற்றும் பண்டாரநாயக்க வாரிசு அரசியல் தென்னிலங் கையில் கணிசமான காலம் செல்வாக்குச் செலுத்தியிருந்தாலும்கூட, மஹிந்த ராஜபக்ஷ போன்று, ஒரு குடும்பத்தை எல்லையற்ற அதிகார முள்ளவர்களாக்கும் வகையில் அவர்கள் எவருமே செயல்பட்டிருக்கவில்லை. ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு எவராலும் மதிப்பிடக்கூட முடியாதளவிற்கு அதன் எல்லைகள் நாலாபுறமும் பரந்திருந்தது. இலங் கையின் நவீன அரச குடும்பம் போன்றே, மஹிந்த ராஜபக்ஷவின் நடவ டிக்கைகள் அமைந்திருந்தன.
மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்து, அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்ட, கோட்டாபய ராஜபக்ஷ, தன்னையொரு வித்தியாசமானவராக காண்பித்துக் கொள்ள முயற்சிசெய்த போதிலும்கூட, மஹிந்த ராஜபக்ஷவால் ஏற்படுத்தப்பட்டிருந்த, குடும்ப செல்வாக்கு வட்டத்திலிருந்து விடுபட கோட்டா பயவால் முடியாமலே இருந்தது.
நான்தான் – நீங்கள் தேடிய தலைவனென்று, சிங்கள மக்களுக்குக்கூறிய, கோட்டாபய ராஜபக்ஷ, ஆகக் குறைந்தது சிங்கள மக்களுக்குக்கூட, நேசமான தலைவராக இருக்கவில்லை. அவரின் நேசம் முழுவதும், ராஜபக்ஷ குடும்பத்தை சுற்றியே வட்டமிட்டது. இதன் விளைவாகே – அவர் நேசிப்பதாக சூளுரைத்த சிங்கள – பௌத்தர்களே, அவரை வெளியேறுமாறு கோரி போராடிவருகின்றனர்.
தமிழ் மக்களை பொறுத்தவரையில், ராஜபக்ஷக்கள் எவராக இருப்பினும், அவர்களை அகற்றவேண்டுமென்னும் நிலைப்பாட்டிலேயே, 2010இலிருந்து, வாக்களித்து வந்திருக்கின்றனர். அந்த வகையில் நோக்கினால், ராஜபக்ஷக்களை வெளியேற்ற வேண்டுமென்னும் அரசியல் கோரிக்கையின் சம்பியன்கள் தமிழ் மக்களாவர். தமிழ் மக்கள் ராஜபக்ஷ க்களை வெளியேற்ற எண்ணியபோது, அதனை சிங்கள – பௌத்தர்கள் வேறு கண்ணோட்டத்தில் பார்த்தனர். ஆனால், இப்போது, அவர்களே,
ராஜபக்ஷ குடும்பத்தை அகற்ற வேண்டுமென்னும் முடிவில் உறுதியாகப் போராடிவருகின்றனர். அதற்குக் கிடைத்த முதல் வெற்றிதான், மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல். னாலும் மஹிந்த ராஜபக்ஷ தென்னிலங்கை அரசியலைப் பொறுத்தவரையில் அனுபவம்மிக்க ஒரு நரி. மஹிந்த பதவியிலிருந்து வெளியேறும்போதே நாட்டின் ஸ்திர தன்மை, மேலும் சீர்குலையும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. அமைதி வழியில் ‘காலிமுகத்திடலில்’ போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது, மஹிந்தவின் ஆதரவாளர்கள், வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டி ருக்கின்றனர்.
இது மஹிந்தவின் இன்னோர் ஆட்டத்தை கட்டியம் கூறுகின்றது. ஏனெனில், மஹிந்தவின் அரசியல் ஓய்வு சாதாரணமாக நிகழப்போவதில்லை. ஒன்றில் மீண்டும் வெற்றிக்கான ஆட்டத்தை மஹிந்த பிறிதொரு வகையில் ஆடப் பார்க்கலாம் – அது நாட்டில் மேலும் பல வன்முறைகளுக்கு வழிவகுக்கலாம் – அல்லது, ராஜபக்ஷ குடும்பம் – எக்காலத்திலும் மீளவே முடியாதளவிற்கு, இலங்கையின் அனைத்து ஆட்சியாளர்களுக்குமான மோசமானதொரு செய்தியாக மாறும் நிலைமை ஏற்படலாம். ஆனால், ராஜ பக்ஷக்கள் அவ்வளவு சாதாரணமாக தென்னிலங்கை அதிகார மையத் திலிருந்து வெளியேறப் போவதில்லை.

Related Articles

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!!!

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் கட்டட திறப்பு விழா

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்காரைதீவு 11ல் அமைந்துள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வும் விஷேட தேவையுள்ள மாணவர்களின் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று அதிபர்...

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களுக்குகற்றல் உபகரணங்கள் வழங்கல்

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது அமரர் நமணன் குகநாதன் என்பவரின் 10ம் ஆண்டு நினைவினை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!

யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தால் பேக்கரி பொருட்களின் புதிய விலைகள் அறிவிப்பு!!!

காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் கட்டட திறப்பு விழா

கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்காரைதீவு 11ல் அமைந்துள்ள சண்முகா மகா வித்தியாலயத்தில் புதிதாக புணரமைக்கப்பட்ட கட்டிடத் திறப்பு நிகழ்வும் விஷேட தேவையுள்ள மாணவர்களின் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வும் இன்று அதிபர்...

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களுக்குகற்றல் உபகரணங்கள் வழங்கல்

காரைதீவு விஷ்ணு வித்தியாலய மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது அமரர் நமணன் குகநாதன் என்பவரின் 10ம் ஆண்டு நினைவினை...

காரைதீவு சிவசக்தி குரு குடைச்சாமிசர்வமத பீடத்துக்கு பக்தி செயற்பாட்டாளர்கள் விஜயம்

இங்கிலாந்தை சேர்ந்த டானியல், தெற்கு அமெரிக்காவை சேர்ந்த மரியல், யோகி நிஷா ஆகியோர் உள்ளிட்ட அன்பர்கள் குழு குரு குடைச்சாமி சர்வமத பீடத்துக்கு தரிசனம் மேற்கொண்டு பராசக்தி அம்மன் ஆலயத்தில்...

மட்டு.மாவட்ட அரச திணைக்களஉத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி

மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறியின் இறுதி நாள் கலாசார நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது அரச சேவைகள், மாகாண...