மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது

0
4

மஹியங்கனை – கெவல் விஸ்ஸ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர், தொடர்ந்தும் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மஹியங்கனை – தம்பராவ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். இரு தரப்பினருக்கு இடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய ஒருவர், சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதெனக் கருதப்படும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.