மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை!

0
10

ரயில் பயணத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதற்கு திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில்களில் நுழையும் போதும், வெளியேறும் போதும் ஊழியர்களிடமிருந்து உதவி பெற வாய்ப்பு கிடைக்கும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜெயசுந்தர தெரிவித்தார்.

அதன்படி, 1971 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்.

இந்த முறை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.