இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு, அரசியல்வாதிகள் என முக்கியஸ்தர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் உள்ள இல்லத்தில், அவரது பூதவுடல், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி, இன்று அஞ்சலி செலுத்தினார்.
அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.